சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் பிரபாஸ் ?
பாகுபலி 1,2 படத்திற்குப் பிறகு இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் அப்படத்தின் ஹீரோ பிரபாஸிற்கு மார்க்கெட் அதிகரித்தது.
இதனை அடுத்து பிரபாஸ் நடிப்பில் சாஹோ என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் விஜய்65 பட நாயகி பூஜா ஹெக்டேயுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஆதிபுரூஸ் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
டாம் குரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபில் அனைத்துப் பாகங்களும் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்தது.
இந்நிலையில், டாம் குரூஸ் அடுத்து மிஷன் இம்பாசிபில் 7 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இவருடன் இணைந்து நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் மெக்குயரி , பிரபாஸ் மிகவும் திறமையானவர். ஆனால், நாங்கள் இருவரும் ஒருமுறை கூட சந்தித்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.