போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
இரண்டு வாரங்களில் போர் தொழில் திரைப்படம் 12 கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக ஈட்டியுள்ளதாம். இது தவிர ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.