வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (21:35 IST)

மகனின் பெயர் சூட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய பூர்ணா!

பிரபல மலையாள நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம். இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், ஸ்ரீமஹாலட்சுமி, அவுனு, சீமா டபகை மற்றும் அகண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகளில்  நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம்  ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை  நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மகனின் பெயர் சூட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி அழகு பார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.