செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:17 IST)

உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா? விஜய்க்கு பொன்னுசாமி கேள்வி

Vijay
உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என விஜய்க்கு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார் பொழுது அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய்  அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ, திரைப்பட காட்சிகள் குறித்தோ, கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..?
 
அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா விஜய்? 
 
இவ்வாறு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.