ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (08:59 IST)

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு… படக்குழுவினர் உடைகளால் எழுந்த சர்ச்சை!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம்,  கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சென்னையில் நேற்று மாலை டீசர் வெளியீடு நிகழ்ந்தது. இணையத்தில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு படக்குழுவினரான கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்பிரபு மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் அணிந்து வந்த உடை சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. தமிழ் மன்னர்களை பற்றி படம் எடுத்துள்ள நிலையில் அது சம்மந்தமான நிகழ்ச்சிக்கு ஷெர்வானி போன்ற வட இந்திய உடைகளை அணிந்து வந்தது குறித்து சமூகவலைதளங்களில் ட்ரோல்கள் மற்றும் மீம்கள் பரவ ஆரம்பித்துள்ளன.