புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:28 IST)

பொன்னியின் செல்வன் படத்தில் உண்மையான நகைகள்: ஜுவல்லரி பார்ட்னர் அறிவிப்பு

Ponniyin Selvan
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இந்த படம் அரசர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அரசர்கள் ராணிகள் இளவரசிகள் ஆகிய அனைவரும் விலை உயர்ந்த நகைகள் அணிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் அனைத்துமே உண்மையான நகைகள் என்றும் இந்த நகைகள் அனைத்தும் கிஷான் தாஸ் ஜுவல்லரி என்ற கடையில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டதாகவும் லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த ஜுவல்லரி தான் இந்த படத்தின் ஜூவல்லரி பார்ட்னர்  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது