செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (17:41 IST)

அதிரடி போலீஸ் வேடத்தில் பிரபு தேவா "பொன் மாணிக்கவேல்" படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர்!

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார். 
 
ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரிக்கிறார்.  இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது விறு விறுப்பான ட்ரைலர் வெளியாகியுள்ளது. 
 
போலீஸ் வேடத்தில் அதிரடி ஆக்ஷனில் பின்னி எடுக்கும் பிரபு தேவாவின் "பொன்மணிக்கவேல்" ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ இந்த ட்ரைலர்.