திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 4 மே 2023 (15:02 IST)

’தி கேரளா ஸ்டோரி’ : தடையில்லை தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு..!

’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் சட்டமூலங்கு பாதிக்கும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 
 
இந்த நிலையில் ’தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அண்டை மாநிலமான கேரள முதல்வர் பிரனாயி விஜயன் இந்த படத்தை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva