திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (16:56 IST)

நில மோசடி வழக்கு… நடிகர் சூரி கமிஷனர் அலுவகலத்தில் ஆஜர் !

நடிகர் சூரி, ரூ.2.70 கோடி நில மோசடி வழக்கில் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சூரி, சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில்  புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2. 70 கோடி  பண மொசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் மீது அந்த மனுவில் குற்றசாட்டியிருந்தார்.

இந்தப் புகாரை ரமேஷ்கொடவாலா மறுத்தார். இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சூரியின் புகாரை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் மீனா விசாரித்து வரு கிறார்.  நேற்று சூரியிடம் விசாரணை நடத்தப்பட்ட  நிலையில், அப்போது அவரிடம் 100 கேள்விகள் கேட்டதாகத் தெரிகிறது.இன்று 2 வது நாளாக மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல்,  முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.