செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (12:30 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசா செய்த தவறால் ஆரவுக்கு கிடைத்த தண்டனை!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் விதிகளின்படி தலைவர் பதவி ஒரு வாரம் மட்டுமே, எனவே இந்த வார புதிய தலைவராக கணேஷ் வெங்கட்ராமன் உள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்கம் முதலே சர்ச்சைகளும், சண்டைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் மறுபக்கம் ஆரவ், ஓவியாவின் காதலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று ரைசா ஆரவ்வின் மைக்கை எடுத்து ஒளித்து  வைத்ததால் அவர் இனி ஆரவ்க்கு காதாகவும், வாயாகவும் செயல்பட வேண்டும் என பிக்பாஸால் தண்டனை கொடுக்கப்பட்டது.
 
இதனால் ஆரவ் மற்றவர்களிடம் பேசவேண்டும் என்றாலும், மற்றவர்கள் அவரிடம் பேச வேண்டும் என்றாலும் ரைசா  மூலமாகத்தான் சொல்ல வேண்டுமாம். இதனால் ரைசாவும், ஆரவ்வும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். 
 
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சொல்லும்வரை இந்த தண்டனை தொடரும். இதனால் ஓவியாவுக்கும், ரைசாவுக்கும் விரைவில் சண்டை வரும் என ஷக்தி கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்த நிகழ்ச்சியை கொண்டு செல்ல பிரச்சனைக்கு பஞ்சம்  இல்லை என சமூக வலைதளங்களில் பரவலாக கருத்து நிலவுகிறது.