வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:19 IST)

போங்கடா டேய்... ப்ரோமோவில் வெட்டிமடியும் பேட்ட vs விஸ்வாசம்!

ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ரிலிஸூக்கு முன்னர் தியேட்டர்கள் பிடிப்பதில் காட்டிய போட்டியை போலவே இப்போது வசூல் நிலவரங்களிலும் போட்டியை காட்டி வருகின்றன.
 
ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் பண்டிகை விடுமுறையை குறிவைத்து ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களுமே வெற்றிக்கரமாக ஓடினாலும் எந்த படம் அதிகம் வசூலித்தது என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது இது தயாரிப்பு நிறுவனம் வரை சென்றுள்ளது. 
 
சன்பிக்சர்ஸ் பேட்ட படம் இன்றோடு தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய உள்ளதாகவும், வேகமாக 100 கோடி வசூல் செய்த தமிழ்ப்படமாகப் பேட்ட மாறப்போவதாகவும் அறிவித்தது. 
இதை தொடர்ந்து விஸ்வாசம் படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்திருக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரி 125 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்தது. 
 
இந்த அறிவிப்புகளை அடுத்து இரு தயாரிப்பு நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வகையில் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளன. 
 
ஆம், சன் பிக்சர்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் எல்லாம் சிரிப்பதை வீடியோவாக உருவாக்கி, இறுதியாக ரஜினி நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா என்று கூறுவது போன்று #PettaLOLpromo என்ற ஹேஷ்டேக்கை அறிமுகம் செய்து ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உங்க மேல கொல கோவம் வரணும். ஆனால், உங்களை எனக்கு பிடிச்சிருக்கு சார், அதனால லாங் லிவ் ஹாப்பி லைஃப்பு என்று அஜித் பேசும் வசனத்துடன் #ViswasamLongLiveHappyLifePromo என்ற ஹேஷ்டேக்கை அறிமுகம் செய்து கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் விஸ்வாசம் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.