திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (12:59 IST)

’பேட்ட’பொங்கலுக்கு பராக் – புது போஸ்டரோடு கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலிஸாவதை உறுதிபடுத்தி அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த நடிப்பில் வரும் நவம்பர் 29-ந்தேதி 2.0 படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அவரது அடுத்த படமான பேட்ட படம் பொங்கலுக்கு ரிலிசாக இருப்பதாக அதன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியோடு, சிம்ரன், நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, பாபி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம்,  இயக்குனர் மகேந்திரன், சசிக்குமார் என மிகப்பெட்ரிய நட்சத்திரப் பட்டளமே நடிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

தற்போது கொஞ்ச நேரத்திற்கு முன்னால் கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த் சிம்ரனோடு குளிர் பிரதேசம் ஒன்றில் மகிழ்ச்சியாக கைகோர்த்து செல்வது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளமையான் தோற்றத்தில் காணப்படும் ரஜினி மிகவும் ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார்.

ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது பேட்ட படமும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.