1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (11:43 IST)

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகிறதா பண்டாரத்தி புராணம்? – கர்ணன் படத்தின் மீது வழக்கு!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள கர்ணன் பட பாடல் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதாக நீதிமன்றத்தில் தடை வழக்கு கோரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் கர்ணன் படத்தில் இடம்பெறும் பண்டாரத்தி பாடல் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அந்த பாடலை படத்திலிருந்து நீக்காவிட்டால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தணிக்கை குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.