ஒரு லைக் போட்டது குத்தமா? – அக்ஷய்குமாரை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை கேலி செய்யும் விதமான ட்வீட்டுக்கு அக்ஷய் குமார் லைக் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு பல்கலைகழக, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் மற்றும் இராணுவம் மாணவர்களை தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ஜாமியா மாணவர்கள் தாக்கப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்ட நபர் ஒருவர் அந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அந்த பதிவை அக்ஷய் குமார் லைக் செய்துள்ளார். அதனால் அக்ஷய் குமாருக்கு கண்டனம் தெரிவித்து பலர் ட்விட்டரில் #BoycottCanadianKumar என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் அக்ஷய்குமார் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து வெளியான செய்திகள் வைரலாகின. அப்போது நான் கனடா குடியுரிமை வைத்திருந்தாலும் இந்தியன்தான் என்று அக்ஷய் குமார் பேசியிருந்தார். இந்நிலையில் மாணவர்கள் போரட்டத்தை இழிவாக கருதும் அக்ஷய்குமாரை கனடாகுமார் என்று அழைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.