வெளியில் இருந்து வருபவர்களுக்கு கருணை காட்டுங்கள்… பாயல் கோஷ் கருத்து!
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீது பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை விமர்சித்து வருவதால் அவரின் பெயரைக் கெடுக்கவே இவ்வாறாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில் இப்போது அனுராக் காஷ்யப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள பாயல் கோஷ் “நான் பணம் படைத்தவள் இல்லை. அதனால் எனக்கு அதரவாக, அனுராக் காஷ்யப்பை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள். அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சரியானவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
வெளியில் இருந்து வருபவர்களுக்கு திரைத்துறையினர் கருணை காட்ட வேண்டும். அவர்களின் கனவுகளை நசுக்கி விடாதீர்கள்.” எனக் கூறியுள்ளார்.