புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:38 IST)

கொரோனா நிலவரம் என்ன? பவன் கல்யாண் ரசிகர்களுக்கு அப்டேட்!

நடிகர் பவன் கல்யாண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது தனது உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அதன் பின்னர் இப்போது அவர் தன்னுடைய உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள். மாநிலத்தில் வெண்டிலேட்டர் போன்ற கருவிகளின் போதாமை இருப்பதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.