திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (21:47 IST)

பவர்ஸ்டார் முன்னாள் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன்கல்யாண். சினிமா ,அரசியல் என இரண்டு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் இவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை.
 
1997ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகளில் இவரை விவாகரத்து செய்து அதன் பின்னர் ரேணு தேசாய் என்ற பெண்ணை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2012ஆம் ஆண்டு ரேணுவையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரேணு தேசாய், ஆறு வருடங்களுக்கு பின்னர் தற்போது மறுமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய டுவிட்டரில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 
ஆனால் ரேணு திருமணம் செய்யக்கூடாது என்று அவ்வாறு திருமணம் செய்தால் அவரை கொலை செய்வோம் என்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரேணு போலீஸ் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.