சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் பதான் டீசர் ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் பதான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஹான் ஆபிரகாம் நடித்துள்ளார்.
ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் பாதன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது.
கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் ரிலீஸாகாத நிலையிலும், அவரது மகன் ஆர்யன் கான் கைதான விவகாரத்திலும் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஷாருக்கான் அதிலிருந்து மீண்டு, பதான், அட்லியின் ஜவான் படங்களில் நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக உருவாகி வரும் பதான் படம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, ரிலீசாகவுள்ளதாகவும்
இப்படத்தின் டீசர் ஷாருக்கான் பிறந்த நாளையொட்டி இன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டீசரை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளது.
இந்த டீசரில் மிகவும் ஸ்டைலிஷாக உள்ள ஷாருக்கான், ஜான் ஆபிரகாமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படம் பாலிவுட்டில் வரலாற்றுச் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த டீஸரை 3 மணி நேரத்தில் 41 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 51 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளது.5.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
ஷாருக்கான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.