1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (17:29 IST)

பார்வதியைக் கழுவியூற்றும் மம்மூட்டி ரசிகர்கள்...

நடிகை பார்வதியை, மம்மூட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கழுவியூற்றி வருகின்றனர்.

 
கேரளாவைச் சேர்ந்த பார்வதி, தமிழில் ‘பூ’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘சென்னையில் ஒருநாள்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள பார்வதி, ரொம்பவே தைரியமானவர். தன்னுடைய கருத்தை எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசுபவர். தன்னுடைய ஜாதி அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, தன் பெயரின் பின்னால் இருந்த ஜாதிப்பெயரை நீக்கியவர்.
 
பார்வதி, சமீபத்தில் நடைபெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுவதைப் பற்றிப் பேசினார். அப்போது, மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கசபா’ படத்தை மேற்கோள் காட்டினார்.
 
இதனால் வெகுண்டெழுந்த மம்மூட்டி ரசிகர்கள், பார்வதியை சமூக வலைதளங்களில் கழுவியூற்றி வருகின்றனர். இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளார் பார்வதி. ஆனால், இதுகுறித்து மம்மூட்டி இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.