வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (19:44 IST)

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சித்ராவிற்கு விபத்து - கதறி அழும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு ஏற்பதையடுத்து கடந்த 8ஆம் தேதி முதல் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி ட்விட்டரில்,  பழைய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சித்ரா வண்டி ஒட்டி விபத்துக்குள்ளான காட்சி எடுக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்தபடி கதறி அழும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ கீழே உள்ள லிங்கில் அந்த வீடியோவை காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shoot...#throwback ❤❤ #vijaytelevision #vijaystars #pandianstores

A post shared by Vijaytelevison 2020 (@vijaytelevision_2020) on