வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (12:56 IST)

இளையராஜாவுடன் இணைந்த பா. ரஞ்சித் - இனி சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ்தானா?

அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டார். தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றார். 
 
இயக்குனராக மட்டும் அல்லாமல் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சிறப்பான திரைப்படங்களை இயக்கி விருதுகளை அள்ளினார். மேலும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வாய்ப்புகள் கொடுத்து பிரபலப்படுத்துவார். என்ஜாய் எஞ்சாமி அறிவு கூட பிரபலடுத்தியது ரஞ்சித் தான். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் ரஞ்சித் இளையராஜாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இனி   சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ் தானா? எகிறது ரசிகர்கள் வட்டாரம்.