வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (19:08 IST)

இந்தியாவிலிருந்து செல்லும் ஆஸ்கர் நாயகர்கள்

இந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது வழங்கும் பரிந்துரை குழுவில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
 

ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட் படங்களுக்காக வழங்கப்படுகின்றன. அதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒருபிரிவில் மட்டுமே பிற நாட்டு படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த விருதை வாங்குவதற்கும் பல நாடுகள் ஆண்டுதோறும் போட்டி போடுகின்றன. இந்தியா பல ஆண்டுகளாக முயற்சித்தும் இன்னும் ஒருமுறை கூட ஆஸ்கர் வாங்கமுடியவில்லை. நம்ம உலக நாயகன் கூட “சொன்னால் கேள் ஆஸ்கர் தூரமில்லை” என்று பாட்டு எழுதும் அளவுக்கு ஆஸ்கர் ஆசை இந்திய சினிமாவில் பரவி கிடக்கிறது.

இந்நிலையில்தான் ஹாலிவுட் திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானும், ரசுல் பூக்குட்டியும் ஆஸ்கர் வென்றனர். தற்போது ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்வு செய்யும் கமிட்டியில் தகுதிவாய்ந்த நபர்கள் இல்லை என்ற புகார் நீண்ட நாளாக இருந்துவந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள முக்கிய சினிமா புள்ளிகளை கமிட்டியில் சேர்க்க முடிவு செய்தார்கள். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 4 இந்தியர்களும் உள்ளனர்.

பாலிவுட் நடிகரான அனுபம் கெர், இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், பெண் இயக்குனர் சோயா அக்தர் மற்றும் பாகுபலி போன்ற படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட் செய்த ஸ்ரீனிவாஸ் மோகன் ஆகியோர் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் இந்திய படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.