1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (12:07 IST)

உண்மையான தல ரசிகனாலதான் இப்படியெல்லாம் பண்ணமுடியும் ..! மீண்டும் நிரூபித்த சிம்பு..!

நடிகர் சிம்பு தனக்கு தப்பு என்று ஒரு விஷயம் தோன்றினால், யாருக்கும் அஞ்சாமல் பலர் முன்னிலையில் தட்டி கேட்பார். கடைசியில் அதுவே மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆகிவிடும் அப்படிதான் கர்நாட்காவில் காவேரி நீர் கொடுக்கும் விஷயத்திலும் ஒரு தமிழனாக சிம்பு சொன்னது பெரும் வரவேற்பு பெற்றது.


 
சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தவைதான் மேலும் அதனை பல முறை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சிம்புவின் பல படங்களில் அஜித்தின் ரெபரென்ஸ் இருந்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது ‘இனி என் படத்திற்கு கவுண்டரில் விற்கும் பணத்திற்கு மட்டும் படம் பாருங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சிம்பு. மேலும்  பாலபீஷேகமோ, அதிக விலை கொடுத்து டிக்கெட்டோ  வாங்கவோ வேண்டாம் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அந்த விடியோவை சிம்புவின் நண்பரும் நடிகருமான மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிம்பு இப்படி பேசியதற்கு முக்கிய காரணமே அவர் தீவிர அஜித் ரசிகர் காரணமே ஏன்னெனில் இதை போன்ற  விஷயத்தை தன் ரசிகர்களுக்கு அஜித் பல ஆண்டு முன்னரே சொல்லி கோரிக்கை வைத்தார். 
 

ஆனால் அப்படி இருந்தும்  சமீபத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியான போது பேனர்கள் மீது ஏறி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். ஆதலால் தற்போது அதனை மனதில் வைத்து சிம்பு இப்படி பேசியுள்ளார் என்று பல நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.