சிம்புவுடன் மீண்டும் ஜோடி போடுகிறாரா ஜோதிகா?
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, நானி, துல்கர் சல்மான், பகத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில் 5வது ஹீரோவாக சிம்பு தற்போது இணைந்துள்ளார். சிம்புவுக்கு இந்த படத்தில் திருப்புமுனை கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதி உள்பட நான்கு ஹீரோக்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் சாரா அலிகான், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களில் ஜோதிகா ஏற்கனவே சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை ஜோடி போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நட்சத்திர கூட்டம் அதிகரித்து கொண்டே போவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் யாருக்கு யார்? ஜோடி என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குழப்பத்தை படம் வெளியாகும் வரை மணிரத்னம் வெளியிட மாட்டார் என்பதே உண்மையாக உள்ளது.