திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:45 IST)

அஜித் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை?

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ளததால், அஜித் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா  என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழாவை நடத்துகிறது தென்னிந்திய நடிகர்  சங்கம். வெறும் கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி, நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடக்க இருக்கின்றன.
 
ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் கலந்து  கொள்கின்றனர். ஆனால், எதிலுமே கலந்துகொள்ளாத அஜித், வழக்கம்போல இந்த விழாவைப் புறக்கணிக்கிறார். இதனால்,  அவர்மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.