செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (19:35 IST)

படத்தில் அரசியல் இல்லை...ஆனால்? மனம்திறந்த காலா படக்குழு

காலா படத்தில் அரசியல் இருக்காது. ஆனால் படம் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும் என்று காலா படத்தின் கதை குறித்து படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 
சமீபத்தில் காலா திரைப்படத்தில் பாடல்கள் வெளியானது. அதில் போராடுவோம் என்று இடம்பெற்ற பாடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தை விமர்சனம் செய்தனர். 
 
ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அரசியல் பேசும் படமாக காலா இருப்பதால் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் காலா திரைப்படத்தின் கதை குறித்து காலா படக்குழுவினர் மனம் திறந்துள்ளனர். மும்பை தாராவியில் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக அரசியல்வாதியை எதிர்த்து போராடுபவராக ரஜினி நடித்துள்ளார். இது சமூக பிரச்சினையை விரிவாக பேசும் படம். படத்தில் அரசியல் இருக்காது. ஆனால் படம் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.