திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (16:09 IST)

பிறப்பால் உயர்ந்தவன் எவனுமில்லை- நடிகை டுவீட்

காலங்கள் மாறிவந்தாலும் மாற்றம் என்பது மாறாதது என்று எத்தனை முறை கூறி வந்தாலும் இன்னும் இந்தியாவில் சாதி குறித்து ஒருவரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் கூறிவருவதும் நடந்துகொண்டுதான் வருகிறது.

இந்நிலையில்,  சின்னத்திரையில் நடித்துவரும் பிரபல நடிகை ஒருவர் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது குறித்த ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??!

பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.