1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (22:23 IST)

'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சற்று முன்னர் சென்னையில் உள்ள ஒருசில திரையரங்குகளில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டு சில நொடிகளில் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்துவிட்டது



 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு தமிழ் திரைப்படம் கூட வெளியாகவில்லை. இன்னும் ஆறு நாட்களில் 'விவேகம்' புயல் வீச தொடங்கிவிட்டால் அனைத்து தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் காணாமல் போய்விடும் என்ற காரணத்தால் எந்த படமும் வெளியாகவில்லை
 
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் அஜித்துடன் போட்டி போட விரும்பாததால் 'விவேகம்' புயல் ஓய்ந்தவுடன் படங்களை ரிலீஸ் செய்யலாம் அனைவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது