செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (12:16 IST)

அடையாளமே தெரியாமல் ஹாலிவுட் நடிகர் போன்று மாறிய நிழல்கள் ரவி!

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980 ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில்  தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் நிழல்கள் ரவி. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி தந்திருந்தாலும் அவர் ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. 
இருந்தும் தொடர்ந்து நடித்து வந்த அவர் வேதம் புதிது, நாயகன், சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். அத்தோடு நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஹாலிவுட் நடிகரை போன்று ஸ்டைலான உடைகளை அணிந்து வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.