சுதந்திரத்திற்கே அனுமதி வாங்க வேண்டியிருக்கு! – நிவேதா பெத்துராஜ் கருத்து!
இந்திய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் பெண்கள் சுதந்திரம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டிலிருந்தே வந்து அறிமுகமாகி பிரபலமான சொற்பமான நடிகைகளுள் நிவேதா பெத்துராஜும் ஒருவர். இன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் பெண்கள் சுதந்திரம் என்பதே இன்னமும் கேட்டு பெற வேண்டிய ஒன்றாக உள்ளதாக நிவேதா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டிய நிலையில்தான் உள்ளோம். வேலைக்கு செல்லும் பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டால் அவர் வேலைக்கு செல்லலாமா? வேண்டாமா? என்பதை அவளது கணவர்தான் முடிவெடுக்கிறார். பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விரும்பினாலும் அதற்காக கணவரிடம் அதை சொல்லி புரிய வைத்து அனுமதி பெற்ற பிறகுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.