திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (11:35 IST)

OTT வந்தாலும் வந்துச்சு சென்சார் இல்லன்னு இஷ்டத்துக்கு எறங்கிட்டாங்க நித்யா மேனன்!

கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் தற்ப்போது வெப் சீரிஸ்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் நித்யா மேனன் நடிப்பில் வெளியான  "பிரீத் இன் டூ த ஷேடோஸ்" என்ற இணைய தொடரில் லெஸ்பியனாக நடித்திருந்தார். அதில் ஸ்ருதி பாப்னாவுடன் லிப்லாப் காட்சியில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளாகினார்.

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் மற்றொரு இணையத்தொடரில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதில் பிகினி உடை காட்சிகளில் அதிகம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் OTT-யில் சென்சார் இல்லை என்பதும் உங்க இஷ்டத்துக்கும் இறங்கிடுவீங்களா? முன்னணி நடிகைக்கு இதெல்லாம் நல்லதில்லை. ஆமாம்.. சொல்லிட்டோம் பார்த்துக்கோங்க என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.