வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (22:37 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் நிக்கி கல்ராணி?

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை அடுத்து இயக்குனர் எச்.வினோத் மீண்டும் அஜித் படத்தை இயக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
 
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான நட்சத்திர தேர்வு தொடங்கிவிட்டதாகவும், இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதாலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதாலும், இந்த படத்தின் நாயகியாக பெரிய நடிகை தேவை இல்லை என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
 
அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் நிக்கி கல்ராணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யாராயும் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
 
'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.