வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (08:21 IST)

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு: சிசிடிவி மூலம் திருடன் கண்டுபிடிப்பு

பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு நடைபெற்றதை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் திருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
‘டார்லிங்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அவரிடம் தனுஷ் என்பவர் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் நிக்கிகல்ராணி வீட்டில் இருந்த விலை உயர்ந்த கேமரா மட்டும் 40,000 பணத்தை திருடிச் சென்று விட்டதாகவும் சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி மூலம் விசாரணை செய்த காவல்துறையினர் நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்த்த தனுஷ் திருடியது பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து திருப்பூரில் தனுஷ் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து திருப்பூர் சென்ற போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்