ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:12 IST)

புதிய திரைப்படங்கள் வெளியாவதில் திடீர் சிக்கல்!

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது என்பதும் 50 சதவீத பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து திரையரங்குகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  விபிஎஃப் கட்டணம் செலுத்துவதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதிய படங்களை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் விஜய் சேதுபதியின் லாபம், சுந்தர் சியின் அரண்மனை 3 புதிய உள்பட பல புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது