நயன்தாராவின் "நெற்றிக்கண்" பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது.
நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடலான “இதுவும் கடந்து போகும்” பாடல் வருகிற ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.