கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடித்த தக்லைப், அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சூர்யா நடித்த ரெட்ரோ ஆகிய நான்கு படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பிரதீப் ரங்கநாதன் நடித்த கீர்த்தீஸ்வரன் மற்றும் டிராகன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசான் ஆகிய படங்களையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, துல்கர் சல்மான், ரவிதேஜா, நாக சைதன்யா போன்றவர்கள் நடித்து வரும் தெலுங்கு படங்களையும் வாங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக பிரபல நடிகர்களின் திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், இந்த படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva