பிளடி பெக்கர் படத்துக்குக் கவின் வேண்டாம் என நினைத்தேன்… நெல்சன் பகிர்ந்த தகவல்!
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இது ஒரு பிச்சைக்கார இளைஞனைப் பற்றிய படம் என்று தெரிகிறது.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் நெல்சன் “முதலில் இந்த படத்துக்கு நான் கவின் வேண்டாம் என நினைத்தேன். ஏனென்றால் தனுஷ் அல்லது விஜய் சேதுபதிதான் சரியாக இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் இயக்குனர் கவின்தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். இப்போது படம் பார்க்கும்போது கவின்தான் சரியான நடிகர் என்பது புரிகிறது” எனக் கூறியுள்ளார்.