வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:44 IST)

சினிமாவில் நுழைவதற்கு முன் நயன்தாரா இப்படி ஒரு வேலை செய்தாரா - வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா இந்த துறையில் வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக இருந்துள்ளார். 
 
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பாருங்கப்பா நம்ம தலைவிய.....எம்புட்டு கஷ்டப்பட்டு முயற்சி செய்து இந்த இடத்திற்கு வந்திருக்காங்கனு.. என கூறி அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Behind Talkies (@behindtalkies) on