வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (15:18 IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா – நயன்தாரா ஆப்செண்ட் !

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கவுள்ள நிலையில் படத்தின் கதாநாயகி நயன்தாரா அதில் கலந்துகொள்ள மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவுல் கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ள நிலையில் படத்தின் கதாநாயகியான நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

இதுசம்மந்தமாக விசாரித்ததில் படங்களில் கமிட் ஆகும்போதே நயன் பப்ளிசிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற ஒப்பந்தத்தோடே கையெழுத்திடுவதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். ஆனால் இன்னொரு தரப்போ நயன்தாராவுக்கு சம்பள பாக்கி உள்ளதாகவும், முருகதாஸுக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் அதனால்தான் வர மறுக்கிறார் எனவும் சொல்கின்றனர்.