செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:17 IST)

ஜீன்ஸ் பட பாட்டைப் போட்டு… நயன் கையப் புடிச்சு – ரொமான்ஸ் பண்ணிய விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் உள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இப்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவர்களின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வருவதும் பின்னர் அடங்குவதும் வாடிக்கையான ஒன்றாகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் “நயன்தாராவைக் கையைப் பிடித்துக் கொண்டு” இருக்கும் விக்னேஷ் சிவன் அந்த வீடியோவோடு ‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதிசயம்’ பாடலின் வரிகளையும் இணைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.