செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (16:13 IST)

”பிரியா விடை பெறுகிறேன்”… இயக்குனர் ராம் படம் குறித்து சூரி நெகிழ்ச்சி!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி உள்ளிட்டவர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் ரயில் செட்டுக்குள் நடந்த காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தற்போது படக்குழுவினரோடு ஸ்டண்ட் இயக்குனர் ‘ஸ்டண்ட்’ சில்வா இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் முதல் முதலாக முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இதை இயக்கி வருவதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் சூரி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்...’ என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.