1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (14:47 IST)

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்… நெட்பிளிக்ஸ் கொடுத்துள்ள தொகை இவ்வளவா?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னையில் நடந்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அதுபோலவே திருமணத்துக்கு வரும் நபர்கள் செல்போன் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கெடுபிடிகள் இந்த திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதால்தான் என சொல்லப்படுகிறது. திருமண வீடியோவை ஒரு திரைப்பட பாணியில் அழகாக உருவாக்கி தரும் பொறுப்பை இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாம் நெட்பிளிக்ஸ். மேலும் இந்த திருமண வீடியோவுக்காக சுமார் 25 கோடி ரூபாய் தம்பதிகளுக்கு ராயல்டி தொகையாகவும் கொடுத்துள்ளதாம்.