திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (15:19 IST)

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் இந்த ஒரே ஒரு குறைதான் – என்ன தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றி நடைபோட்டு வருகிறார்.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவரின் மூக்குத்தி அம்மன் திரைப்பட வெற்றியும் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நயன்தாரா அங்குள்ள முன்னணி நடிகர்கள் அத்தனை பேரோடும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதே போல தமிழிலும் எல்லா முன்னணி நடிகர்களோடும் நடித்திருந்தாலும் கமலுடன் மட்டும் அவர் நடிக்கவில்லை. அதுமட்டுமே அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு சின்ன குறையாக இருக்கும்.