வலிமை தயாரிப்பாளருடன் நயன்தாரா? வைரல் புகைப்படம்!
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது. அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் நியூ யார்க்கில் படித்து வருகிறார். அவரை சந்திக்க போனி கபூர் அங்கே சென்றுள்ளார். இதற்கிடையில் வருகிற நவம்பர் 18-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் போனிகபூர் அவரின் மகள் குஷி கபூரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிகில் படத்தையடுத்து நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் அதையடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.