சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (22:26 IST)

சுந்தர் சியின் சங்கமித்ராவில் நயன்தாரா? சாத்தியம் உண்டா?

சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்டமான திரைப்படமான 'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதும் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகையின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'சங்கமித்ரா' கேரக்டரில் நடிக்க சுந்தர் சி உருவாக்கிய பட்டியலில் நயன்தாரா பெயர் முதலிடத்தில் உள்ளதாம்





ஆனால் நயன்தாராவிடம் போய் இரண்டு வருடம் கால்ஷீட் வேண்டும் என்று கேட்கும் துணிச்சல் இன்னும் யாருக்கும் வரவில்லை. ஒரு படத்திற்கு மூன்று அல்லது மாதங்கள் கால்ஷீட் கொடுத்தாலே ரூ.3 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, ஒருவேளை இரண்டு வருட கால்சீட் கொடுக்க சம்மதித்தால் கேட்கும் தொகையை நினைத்தாலே படக்குழுவினர்களுக்கு அச்சம் ஏற்படுகின்றதாம்

ஆனால் 'பாகுபலி' போன்ற ஒரு படத்தில் நாம் நடிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் நயன்தாரா மனதில் இருப்பதாகவும், எனவே கால்ஷீட் மற்றும் சம்பளம் ஆகியவற்றை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு 'சங்கமித்ரா'வில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை நயன்தாரா சம்மதிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கின்றார் சுந்தர் சியின் ஆஸ்தான நாயகி ஹன்சிகா என்பதுதான் லேட்டஸ்ட் சங்கமித்ரா தகவல்