1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 8 மே 2017 (16:58 IST)

நயன்தாரா தற்போது எங்கு என்ன செய்கிறார் தெரியுமா??

தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நடிகை நயன்தாரா பற்றி எப்பொழுதும் செய்திகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. 


 
 
நயன்தாரா, காதல் தோல்விகளுக்கு பின்னர் மறுபிரவேசம் எடுத்துள்ள நிலையில், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்போது அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். தமிழில் மிகவும் பிஸி என்றாலும் தெலுங்கு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.
 
ஆராடுகுலா புல்லட் என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என தெரிகிறது.