வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (17:07 IST)

அப்போது கேள்வி கேட்டீர்கள்... இப்போது ஏன் ஓட்டுப் போட வரவில்லை – நயன்தாராவுக்குக் கேள்வி !

ராதாரவி விஷயத்தின் போது நடிகர் சங்கத்தை தட்டிக்கேட்ட நயன்தாரா நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராதது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அந்த படத்தின் நாயகியான நயன்தாரா மீது சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விக்னேஷ் சிவன் உள்பட திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகாவும், ராதாரவி பேசியது தவறு என கூறியுள்ளார். இந்த விவகாரம் பூதாகாரமானதை அடுத்து திமுக வில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.

சினிமா சமம்ந்தமான விஷயங்களில் அதிகமாக எதிர்வினையாற்றாத நயன்தாராவே இந்த விஷயத்தில் ராதாரவிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் சங்கத்துக்கு சிலக் கேள்விகளை முன் வைத்தார். அதில் உச்சநீதிமன்ற ஆணையை ஏற்றுப் புகார் குழுவை எப்போது அமைப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். இதனால் நடிகர் சங்கமும் ராதாரவியைக் கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நயன்தாராவின் இந்த செயலை எல்லோரும் அப்போது பாராட்டினார்கள்.

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நயன்தாரா கலந்து கொண்டு வாக்களிக்காததால் அனைவரும் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் பிரச்சனைக்கு மட்டுமென்றால் நீங்கள் கேள்வி எழுப்பலாம், ஆனால் சங்கத்துக்காக வாக்களிக்கக் கூட நீங்கள் வரமாட்டீர்களா எனக் கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கியுள்ளார். இந்த முறை மட்டுமல்லாது கடந்த முறையும் நயன்தாரா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.