ஷாருக் கான் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா… எந்த படம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடிப்பது ஒரு பக்கம் என்றால், கதையின் மையக் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கும் படங்களுக்கும் ஒரு மார்க்கெட் உள்ளது.
இதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். நேற்று அவர் ஷாருக் கானோடு நடித்த ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜவான் படத்துக்கு முன்பே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக் கானோடு நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு வந்துள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாரா அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் நயன்தாரா. இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கானுக்கு கதாநாயகியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார்.