வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (22:53 IST)

நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ கதை இதுதான்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ’மூக்குத்தி அம்மன்’ என்ற படம் உருவாக உள்ளது என்பதையும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவர் விரதம் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது தெரிந்ததே. அந்த செய்தியின்படி நயன்தாரா அம்மனாக நடித்த இருப்பது உண்மைதான் 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அவர் ஒரு நவநாகரீக நங்கையாகவும் நடிக்க உள்ளாராம். ஒரே படத்தில் அம்மனாகவும் நவநாகரீக நங்கையாகவும் நடிப்பது எப்படி என்ற கேள்விக்கு விடை இதுதான்
 
ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்த ஒரு அபூர்வமான சக்தி காரணமாக அவருடைய கண்களுக்கு மட்டும் அம்மனாக நயன்தாரா தெரிவதாகவும், மற்றவர்கள் கண்களுக்கு நயன்தாரா நவநாகரீக மங்கையாக தெரிவதாகவும், கதை அமைக்கப்பட்டுள்ளதாம்
 
அம்மன் நவநாகரீக மங்கையாக அவதாரம் எடுத்து, போலி சாமியார்களை எப்படி அழிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. அம்மன் படமாக இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து கடைசியில் ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இந்த படம் அமையும் என்று ஆர்ஜே பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்