வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 11 அக்டோபர் 2023 (13:13 IST)

மீண்டும் இந்தி படத்தில் நயன்தாரா? இவர் தான் ஹீரோ...

nayanthara with two Children
நடிகை நயன்தாரா மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில், இவர் அட்லீ இயக்கத்தில்,  ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் என்ற பான் இந்தியா படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை அடுத்து, மீண்டும் இந்தி படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜவான் பட வெற்றியைத் தொடர்ந்து, நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த இந்திப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.